Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு எம்மைப் பற்றி தென் மாஹாணத்தைப் பற்றி

தென் மாகாண  சபை

லங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் மற்றும் 1987இலக்கம் 42 கொண்ட மாகாண சபைகள் சட்டத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட எட்டு மாகாண சபைகளில் தென் மாகாண சபையூம் ஒன்றாகும்.

 

கௌரவ மாகாண ஆளுனர் கலாநிதி ஹேமகுமார நாநாயக்கார அவர்கள்

 


கௌரவ முதலமைச்சர் ஷான் விஜயலால் த  ஸில்வா அவர்கள்

 

 

தென் மாகாணத்தின் கொடி

 

மாகாண சபைகள் நிறுவப்பட்ட பின்னர் ஒவ்வொரு மாகாண சபைக்கும் மாகாணத்திற்குரித்தான கொடியை நிர்மானித்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

 

 

இக்கொடியை நிர்மானிப்பதற்குரிய பணி அறிஞர் குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், அக்குழு மாகாணத்தின் வரலாற்று கலாச்சார, சமூக முதலிய சகல துறைகளினதும் பின்னணிகளை ஆராய்ந்து கொடியை நிர்மானிப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியிருப்தோடு அந்த ஆலோசனைகளின் பிரகாரம் தென் மாகாணத்திற்கான கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வடிவமைப்பின் போது அவர்கள் மேற்கொண்ட கருதுகோள்கள்  பின்வருமாறு அமைந்தன. வரலாற்று முக்கியத்துவம் மிக்க தம்புள்ள குகை விகாரையில் குறிக்கப்பட்டுள்ள சுவர்ச் சித்திரங்களிடையே புராதன சிங்கக் கொடியின் குறிப்பும் காணப்படுகின்றது. இலுக் இலை எனப்படும் சிறிய வாள் ஒன்றினை கையேந்தி ஓடும் சிங்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட இச்சம்பிரதாயக் கொடி றுஹூணு கொடியாகக் கருதப்படுகின்றது.

 

அதே போல் துட்டகைமுனு மன்னனின் முச்சிங்களத்தையூம் ஒன்றுபடுத்தும் யூத்தத்தின் போது மாகம இராசதானியத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற போது சிங்கக் கொடியையே ஏந்திச் சென்றார். இரத்தச் சிவப்பு நிறத்தை பின்னணியாகக் கொண்ட செம்பு நிற சிங்க உருவத்தினால் அது அமைக்கப்பட்டிருக்கும்.

 

அதன் படி றுஹூணு கொடியின் புதிய உருவை ஏந்தி ஓடும் சிங்கத்தின் உருவமும் துட்டகைமுனு மன்னனின் யூத்த காலத்தில் ஏந்திக் கொண்டு செல்லப்பட்ட கொடியில் குறிக்கப்பட்ட இரத்த நிறமும் சிங்க உருவமும் மற்றும் செம்பு நிறமும் மாகாண கொடிக்கு இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

 

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் மற்றும் சகல இனத்தவர்களையூம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசியக் கொடியின் நிறங்களையூம், தரத்தையூம் சேர்த்துக் கொள்வதற்கும் அதில் வரும் வெள்ளரச இலைகள் நான்கு (மெத்தா, கருணா, முதிதா, உபேக்ஷா) அவ்வாறே தென் மாகாணக் கொடியிலும் சேர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

 

சூரிய, சந்திர சேர்ப்பின் போது தெவிநுவர தேவாலயத்திற்குரிய கொடியில் கலை பொறிக்கப்பட்டுள்ள உருவ அமைப்பிலும், சிங்க உருவத்தை அமைக்கும் போது ஹம்பாந்தோட்டை மாவட்டக் கொhடியினை பின்பற்றி உருவமைக்கப்பட வேண்டுமெனவூம், ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஒன்றிணைப்பைப் பேணுவது அபிலாஷையாகக் கொள்ளப்பட்டது. அதன்படி சம்பிரதாயக் கொடியின் சிலவற்றின் கலப்பாக தென் மாகாணக்  கொடியைக் கருத முடியூம்.

 

இலுக் இலை ஆதிகாலத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றது. எனினும் அது பயங்கரத்தையோ, அடக்குமுறையையோ வெளிப்படுத்தாது. நீதியூம்இ நேர்மையூம் இலுக் இலையின் முக்கிய அர்த்தமாகும். இங்கு ஓடுகின்ற சிங்கம் ஈடுபாடு, அஞ்சாமை, காம்பீரம் என்பவற்றின் அடையாளமாகும். கொடியின் மேல் சிங்கத்தின் இரு பக்கங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள சூரிய, சந்திர உருவங்கள் உறுதிப்பாட்டையூம்இ நிலைப்பாட்டையூம் வெளிப்படுத்துகின்றது. சூரியனும்இ சந்திரனும் நிலைத்திருக்கும் வரை என்ற மரபு மொழி இதன் மூலம் பகன்று நிற்கின்றது. அதே போல் சூரிய, சந்திரக் கொடி இஸ்தோத்திர பதாதையாகவூம், வெற்றியின் சின்னமாகவூம் கருதப்படுகின்றது.

 

தென் தேசத்தின் புராதன நிலைப்பாடு வெற்றிகரமான யூத்த வரலாற்றையூம் சமய, தேசாபிமானங்களும், இனங்களுக்கிடையே  சௌஜன்யம், சமூக உறவூ, நல்லிணக்கப்பாடு என்பன கொடியினைச் சூழ பதிக்கப்பட்டுள்ள நிறங்களின் மூலம் புலப்படுத்தப்படுகின்றன.

 

தென் மாகாண புஷ்பம்

  

இரண்டாயிரத்து ஐந்து ஆண்டுகளாக வெசாக் மாதம் இருபத்திரெண்டாம் திகதி நிகழும் உயிரியில் பாதுகாப்புத் தினத்தை முன்னிட்டு உயிரியல் அடையாளச் சின்னமான உயிரியல் பாதுகாப்புப் போன்றே அது பற்றி மக்களை அறிவூ+ட்டும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் மாகாணங்களுக்கான புஷ்பத்தை பிரகடனப்படுத்துவதற்கு சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டது.

 

அதன் படி பத்திரிகைகள் மூலம் மக்களை அறிவூட்டும் கருத்துக்கள், யோசனைகள் வழங்கப்பட்டு அவ்வந்த மாகாணங்களுக்குரிய, தேசத்திற்குரிய, அரிதான மருத்துவப் பயன் மிக்க, பயன்பாடுள்ள, கவர்ச்சிகரமான ஆகிய பல்வேறு அம்சங்களைக் கருத்திற் கொண்டு மிகவூம் பலமை மிக்க அறிஞர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்ப்பின் படி அந்தந்த மாகாணத்திற்குரிய புஷ்பம் தெரிவூ செய்யப்பட்டது.

 

தென் மாகாண அமைச்சர் சபையில் போலவே தென் மாகாண சபையினதும் இணக்கப்பாட்டைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சின் மூலம் தென் மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு நாடு முழுவதும் பரவியிருக்கும் பதினையாயிரம் வருடங்கள்  பழமை வாய்ந்த வரலாற்றைக் கொண்டிருக்கும் விசேட அடையாளச் சின்னங்கள் பலவற்றைப் பெற்றிருக்கும் சிந்தையைக் கவரும் வர்ணத்தையூம், உருவமைப்பையூம் கொண்டிருக்கும் ஹீன் போவிட்டியா மலர்தென் மாகாணத்தின் புஷ்பமாகப் பெயரிடப்பட்டது.

ஹீன் போவிட்டியா மலர்

 

Melaftomataceae எனும் குடும்பத்தைச் சேர்ந்த ஹீன் போவிட்டியா செடியின் விஞ்ஞானப் பெயர் Osbeckia Octandra ஆகும். இலங்கைக்கு மட்டுமே உரித்தான ஹீன் போவிட்டியா செடி இலங்கையில் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள புராதன சுவடிகளின் மூலம் 15000 முதல் 20000 ஆண்டுகள் வரை பழைமை வாய்ந்ததாக கருதப்படுகின்றது.   இது கடல் மட்டத்திலிருந்து 5000 அடி முதல் 6000 அடி வரை உயரம் கொண்ட உலர் ஈர வலய மலைப் பிரதேசங்களில் காணப்படுவதுடன், காட்டை வெட்டி சுத்தப்படுத்திய நிலப்பரப்பில் பெருமளவூ காணப்படும். இத்தாவரத்திற்கு சூரிய ஒளி அதிகமாகத் தேவைப்படுவதனால் திறந்த சுற்றாடலில் பெருமளவூ காணப்படும். பற்றைகளாக வளரும் இச்செடி 2 அடி முதல் 4 அடி வரை  உயரமாக வளரும் தன்மையூடையது. இம்மலர் 5 இதழ்களுடன் கூடிய  இளம் ஊதா நிறமுடையதாகவூம்இ தண்டில் ஒரு பூவைக் கொண்டதாகவூம் மலரும்.

 

சம்பிரதாய ஆயர்வேத ஒளடதமாகவூம், இவ் ஹீன் போவிட்டியா செடி பயன்படுத்தப்படுகின்றது. நீரிழிவூ, மூல நோய்இ மஞ்சட் காமாலை போன்ற நோய்களுக்கு மருந்தாக இதன் வேர், இலை, தோல் என்பன பயன்படுத்தப்படுகின்றன.  

 

நீரிழிவூ நோய்க்காக இதன் தண்டு, கொழுந்து, பழுத்த இலை என்பவற்றின் கறியூம், மூல நோய்க்காகத் தண்டும், செடியின் தண்டும் மஞ்சட் காய்ச்சலுக்காக வேர் மற்றும் இலைகளினாலான கஷாயமும் பயன்படுத்தப்படுகின்றது. அது மட்டுமன்றி தற்காலத்தில் அலங்காரச் செடியாகவூம் இது மக்களுடன் இணைந்துள்ளது.

 

15000 ஆண்டுகள் பழைமையான வரலாற்றுக்கு உரிமை கோரும் இச்செடி மனிதனின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் மற்றும் சுற்றாடலின் காலநிலை மாற்றங்களுடன் தொடர்புடைய பெறுமதி மிக்க தாவரமாகும்.

 

 

 

 

அரசாங்க தகவல் நிலையம்