Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு காட்சியகம்

முக்கியமான இடங்கள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

திஸ்ஸமகாராம விகாரை - ஹம்பாந்தோட்டை மாவட்டம்

திஸ்ஸ வாவியினை அண்மித்து அமைந்துள்ள திஸ்ஸமகாராமை றுஹூணையின் விகாரைகளிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இது காவன்திஸ்ஸ மன்னரினால் நிர்மானிக்கப்பட்டதாக மகா வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்காவது மிகுந்து ஏப்பாவினால் ஒதுக்கப்பட்டதாகக் கருதப்படும் சுவடியில் இவ்விகாரையில் புத்த பெருமானின் இடது புனிதப்பல் புதைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்த பெருமானின் மூன்றாவது இலங்கை விஜயத்தின் போது திஸ்ஸ மகாராமைக்கும் விஜயம் செய்ததாக தாது வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. துட்டகைமுனு மன்னன் (கி.மு. 161- 137) இவ்விகாரையில் மலர்விளக்குப் பூஜை செய்து இலங்கையை ஒன்றுபடுத்தும் போராட்டத்துக்கான பயணத்தை ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது.

இந்த வரலாற்று ரோஹண அரசின் பிரதான சமயஇ கலாச்சார மத்தியஸ்தளமாகும். இங்கு ஆயிரக் கணக்கான பௌத்த பிக்குகள் வசித்தாரக்ள் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை வாழ் பௌத்த மக்கள் வழிபாடு செய்யூம் முக்கியமான புனிதஸ்தலம் இதுவாகும்.

 

யட்டால விகாரை

தெபரவெவ மற்றும் திஸ்ஸமகாராம நகரங்களுக்கிடையே திஸ்ஸ வீதியை அண்மித்து இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இது றுஹூணை இராச்சியத்தின் ஆரம்ப கர்த்தாவாகக் கருதப்படும். மகாநாக குறுநில மன்னனால் நிர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. தனது சகோதரன் தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் அரசியூடன் ஏற்பட்ட மனக்கசப்புக் காரணமாக இராசரட்டையை துறந்துறுஹூணையை நோக்கித் தப்பித்துச் செல்கையில் இடைவழியில் மகாநாக மன்னனின் மனைவிக்கு பிரசவ வேதனை ஏற்பட்டு இந்த இடத்தில் ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள். யட்டாலதிஸ்ஸ எனப் பெயரிடப்பட்ட அந்த இளவரசன் பிரசவிக்கப்பட்ட அந்த ஸ்தானத்தை நினைவூ கூறுமுகமாக மகாநாக குமாரன் இங்கு விகாரை ஒன்ற அமைத்தாகவூம் அது யட்டால விகாரை எனப் பிரசித்தி பெற்றதாகவூம் கூறப்படுகின்றது.

 

சித்துல்பவ்வ

 
இது றுஹூணையின் பழைமை வாய்ந்த புனிதஸ்தளமாகும். இவ்விகாரை மகா வம்சத்தில் சித்தல பப்பத்த எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திஸ்ஸ மகாராம நகரத்திலிருந்து கிரிந்த வீதியில் யோதகண்டிய வாவியைக் கடந்து சிறிது தூரம் சென்ற பின் இடது பக்கத்தில் காட்டினூடாக செல்லும் மணற்பாதை ஒன்றுள்ளது. இப்பாதையில் 16 மைல்கள் (25.7 கி.மீ.) சென்றதும் சித்துல்பவ்வ தென்படும். புராதன காலத்தில் சித்துல்பவ்வ வனவாசிகளான புத்த பிக்குகளின் பிரதான மத்தியஸ்தானமாக விளங்கியது. இங்கு வசித்த பௌத்த பிக்குமார் மதபக்தியிலும்இ அறிவூ ஞானத்திலும் கீர்த்தி மிக்கவர்களாக விளங்கினர்.

இப்புனிதஸ்தளத்தில் பெரிய சித்தல்பவ்வ இ சிறிய சித்துல்பவ்வ எனும் கற்பாறைகள் இரண்டு காணப்படுகின்றன. இதனைச் சூழ சித்துல்பவ்வ வாவி அமைந்துள்ளது. 400 அடிகள் உயரம் கொண்ட பெரிய சித்துல்பவ்வ கற்பாறையில் கற்குகை விகாரை ஒன்றுள்ளது. பாறையின் உச்சியில் சித்தல்பவ்வ மகாசாய தென்படும். இது காவன்திஸ்ஸ மன்னனால் நிர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

தற்போது கிடைக்கப் பெற்றுள்ள சுவடிகளுக்கமைய இதன் பராமரிப்பின் நிமித்தம் பல்வேறு கிராம பூஜைகள் நடாத்தப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்புனித தளம் தொடர்பாக ருசிகரமான வரலாற்றுத் தகவல்கள் புராதன புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

முல்கிரிகல மகா விகாரை

றுஹூணையின் மிகப் பழைமை வாய்ந்த புனிதஸ்தளமான இது முல்கிரிகல என்ற பிரசித்தி பெற்ற கற்பாறையின் உச்சியில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தின் விகாரைகளிடையே முக்கியத்துவத்தில் இது இரண்டாம் இடத்தைப் பெறுவது திஸ்ஸமகாராம விகாரைக்கு மாத்திரமே.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மேற்குப் பாகத்தில் அமைந்துள்ள இந்த புனித  விகாரை பெலியத்த வீரக்கெட்டிய பாதையில் முல்கிரிகல சந்திக்குத் திரும்பி முல்கிரிகல - ஒக்கேவெல பாதையில் ஒரு மைல் (1.6 கி.மீ) தூரத்தில் சென்றடைய முடியூம்.

 
இது காவன்திஸ்ஸ மன்னரினால் செய்விக்கப்பட்டதென ஸீ.டப். நிகலஸ் உட்பட வரலாற்றாய்வாளர்கள் பலர் முடிவூ செய்துள்ளனர். இங்குள்ள பிரமண எழுத்துக்களால் எழுதப்பட்ட பழைமை சுவடுகள் விகாரையின் பழைமையை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகளாகும்.

இந்தப் புனிதஸ்தளத்தில் வரையப்பட்டுள்ள சுவர்ச் சித்திரங்கள் இவிகாரை இல்லங்கள் இ தாது கோபுரம் இ செதுக்கல் என்பன கண்டி இராச்சியக் காலத்திற்கும்இ அதற்குப் பிற்பட்ட காலத்திற்கும் உரியதாகும். புராதன காலத்தில் இப்பிரதேசத்தில் தோன்றிய நாகங்கள் அருகாமையில் இருந்த மரத்திலிருந்து இக்கற்பாறைக்குப் பாய்ந்து வந்து கீழ்ப்புறமாக ஊர்ந்து சென்றதாகவூம்இ அந்நாகம் சென்ற வழிப்பாதைக்கமைய விகாரையின் வரைபு வரையப்பட்டதாகவூம் கூறப்படுகின்றது. புராதன கலைச் சிற்பங்கள் காரணமாக இந்த விகாரை வெளிநாட்டவர்களிடையே பிரபல்யம் பெற்றுள்ளது. முல்கிரிகல விகாரையைத் தரிசிப்பதற்காக வெளிநாட்டவர்களிடையே அழியாச் சேவையொன்றை மேற்கொண்ட நபர் பிரித்தானிய யூகத்தில் இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய ஜோர்ஜ் டர்னர் ஆவார். அவர் 1826 ம் ஆண்டு முல்கிரிகல விகாரைக்கு வந்த போது பெற்றுக் கொண்ட மகாவம்சத்தின் பிரதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். மேற்கத்திய அறிஞர்கள் இலங்கை வரலாற்றின் புராதன சிங்களஇ பாளி இலக்கிய  ங்ளகளையூம்இ கலைகளையூம் பற்றிய கவனஞ் செலுத்தவூம் அவ்விடய     ங்கள் பற்றிய கலை பற்றிய ஆய்வூகள் பலவற்றை மேற்கொள்ள வழிகோலியது டர்னரின் புத்தகம் வெளியானதன் பின்னரேயாகும்.

தென்னிலங்கையின் அண்மைக்கால சமய மேம்பாட்டுக்குமகத்தான சேவை இப்புனிதஸ்தளத்தின் மூலம் நிறைவேற்றப் பெற்றுள்ளது.

  

கிரிந்த விகாரை

 
திஸ்ஸ மகாராம நகரத்திலிரந்து 07 மைல்கள் (11.3 கி.மீ) தூரத்தில் திஸ்ஸஇ கிரிந்த வீதியல் இவ்விகாரை அமைந்தள்ளது. பண்டைக் காலத்தில் இது மெதவிகாரயஎன வழங்கப்பட்டது. றுஹூணை வரலாற்றில் முக்கிய இடம் இவ்விகாரை பெறுகின்றது. கடற் கொந்தளிப்பிலிருந்து நாட்டு மக்களை பாதகாப்பதற்காக கெழனி திஸ்ஸ மன்னன் தனதுபுதல்வியாகிய விகார மகா தேவியை கடலுக்குப் பலியிட்டார். அவ்வாறு  கடலில் மிதந்து வந்த இவ்விளவரசி இலங்கையின் கிழக்குத் திசையின் நீண்ட கடற்கரையில் அமைந்துள்ள இவ்விடத்தில் சேர்ந்ததாகக் கூறப்படுகின்றது. விகாரமகாதேவி றுஹூணைக்கு வந்தடைந்த இவ்விடத்தை நினைவூ கூறுமுகமாக காவன்திஸ்ஸ மன்னன் இவ்விகாரையைக் கட்டுவித்ததாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

கிரிந்த கடற்கரையில் அமைந்துள்ள கற்தூணின் உச்சியில் நிர்மானிக்கப்பட்டுள்ள இவ்விகாரையில் போதி ஒன்றும்இ விகாரை இல்லம் ஒன்றும் விகாரமகாதேவி நமஸ்கரிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ள உருவச் சிலையொன்றும் உள்ளன. கரைக்கும்இ கடலுக்கும் தௌpவாகத் தென்படக் கூடிய வகையில் மிகவூம் மனங்கவர் சூழலில் அமைக்கப்பட்டுள்ள இது இலங்கை பௌத்த மக்களின் முக்கிய வணக்கஸ்தளமாகும்.

 

கோட பப்பத விகாரை

வளவை கங்கை கடலில் கலக்கும் பாய்குடா எனப்படும் இடத்தில் கடற்கரையோரத்தில் கல் மேடு ஒன்றின் உச்சியில் இந்த புனிதஸ்தளம் அமைந்துள்ளது.

தங்ளகாலை - ஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையில் 142 ம் 143 ம் மைற்கற்கள் இரண்டிற்கிடையிலுள்ள பிரதேசத்தினூடாக இந்த ஸ்தளத்தை அடையக்கூடிய பாதை ஒன்றுள்ளது.

கோடபப்பத என்ற பெயரில் பண்டைக் காலத்தில் அறியப்பட்ட இந்த விகாரை தறபோது கொடவாயவிகாரை எனப் பிரபல்யமடைந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டுக்கான சுவடி ஒன்றில் இது கொடவாய வெஹெர எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகாரை 1ம் கஜபாகு (கி.பி. 114 136) மன்னரினால் செய்விக்கப்ட்டதாகக் கூறப்படுகின்றது.

கொடபவத எனும் துறையின் மூலம் அறவிடப்பட்ட வரி இவ்விகாரையின் செயற்பாடுகளுக்காகப் பூஜை செய்யப்பட்டதென குறிப்பிடும் சுவடுகளில் இந்த ஸ்தானம் காணப்படுகின்றது. இந்த சுவடிகளில் காமினி அபய மன்னரினால் செய்விக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு பெயர் குறிப்பிடப்பட்ட காமினி அபய எனும் அரசன் 1ம் கஜபாகு மன்னன் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

 

ரம்பா விகாரை

நோனாகம - இரத்தினபுரி நெடுஞ்சாலையில்  உடரொட்ட எனும் கிராமத்தில் வளவை கங்கை கரையை அண்மித்து அமைந்துள்ள இது றுஹூணையின் பழைமை வாய்ந்த வணக்கஸ்தளமாகும். அம்பலாந்தோட்டையிலிருந்து இந்த ஸ்தானத்திற்குள்ள தூரம் 08 மைல் (12.8 கி.மீ) களாகும்.

இது 1ம் விஜயபாகு மன்னரினால் நிர்மானிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 1ம் விஜயபாகு மன்னன் சோழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த யூத்தம் இந்த ஸ்தானத்திலிருந்தே நடாத்தப்பட்டது. பத்தாவது பன்னிரெண்டாவது நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் ரம்பா விகாரை றுஹூணையின் முக்கியத்துவம் மிக்க சமய மற்றும் கலைகளுக்கான மத்திய நிலையமாகவிளங்குகின்றது.

 

சித்தமகல்ல விகாரை

ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டத்தை வேறுபடுத்தும் ரம்மலே மலைத் தொடரின் ஹம்பாந்தோட்டை பக்கமாக இருக்கும் சாய்வில் அமைந்துள்ள வராப்பிட்டிய கிராம சேவகர் பிரிவில் இந்த லென் விகாரை அமைந்துள்ளது.

கிரம - ஹூலங்கன்த வீதியில் வராப்பிட்டிய சந்தியின் இடது பக்கமாக அமைந்திருக்கும் வராவிட்டிய மாவரல வீதியில் இந்த வணக்கஸ்தளம் அமைந்துள்ளது.

 

மேல் விகாரைஇ கீழ் விகாரை என அழைக்கப்படும் இரு புனிதஸ்தளங்களிள்ளும் பனினெட்டு முழமுடைய சாய்ந்திருக்கும் உருவச் சிலை இரண்டும்இ ஏழு கிழமை உபதேச கூடம்இ ஸூவஸிவிவரணய வெளிப்படுத்தும் படமும் உள்ளது.

 

மாடெல்லோ தூண்

ஹம்பாந்தோட்டையில் அரச அதிபர் காரியாலயத்திற்கு அண்மையில் இன்றும் காண முடிந்த இத்தூண் ஒல்லாந்தர் காலத்தின் நிர்மானமாகும். அக்காலத்தில் கண்டி இராச்சியத்திற்கு உப்பு ஹம்பாந்தோட்டை உப்பளத்திலிருந்தே கொண்டு செல்லப்பட்டது. உப்பு வழங்கலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மலை நாட்டு மன்னனை மடக்க உத்தேசித்த ஒல்லாந்தர் இங்கு காவல் நிலையமொன்றை அமைத்து படைப் பிரிவொன்றை ஏற்படுத்தியது. ஹம்பாந்தோட்டை மலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ள     இத்தூண் ஆக்கிரமிப்புஇ மற்றும் பாதுகாப்பு மத்தியஸ்தளமாக முக்கியத்துவம் பெறுகின்றது.

1926ம் ஆண்டில் இங்கு மாவட்டப் பொறியியல் அலுவலகம் அமைக்கப்பட்டது. இது ஆங்கிலேய தேசிய கடற்படை பொறியியலாளரான சேனாதிபதி கொப்பர் என்பவரினால் புனர் நிர்மானம் செய்யப்பட்டதுடன்இ அதற்கு மார்டெலோ டவர் (ஆயசவநடடழ வூழறநச) எனப் பெயரிடப்பட்டது. இவ்வாறு குறிப்பிடுவதற்கு அக்காலத்தில்; ஐரோப்பாவின் கோடிகா எனும் இடத்தில் நிறுவப்பட்ட இதனை ஒத்த கட்டிடமொன்றின் பெயரின் அடிப்படையே காரணமாகியது. இது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காணப்படும் மேற்கத்திய கட்டிடக் கலையினை தௌpவூபடுத்தும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டிடமாகும். இதன் உயரம் 50 அடிகளாகும்.

மகா ராவணா (புசநயவ டீயளளநள) சிறு ராவணா (டுவைவடந டீயளளநள) கலங்கரை விளக்குகள்

நகரங்களுக்கிடையிலான கடற் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிலையங்கள் இலங்கையின் தென்கிழக்கு கடற் பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஏழு கடலையூம் தாண்டி இந்த இடத்தில் கடந்து செல்ல வந்த கப்பல்கள் பல காலாகாலமாக பலி கொண்ட இக்கற்பாறையின் மேல் இன்று உலகின் ஆச்சரியமிக்க கலங்கரை விளக்குகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. மாலுமிகளின் செய்திகள் கூறும் மெய் சிலிர்க்கும் தகவல்கள் பலவற்றுடன் தொடர்புடைய இக்கற்பாறைகள் இரண்டும் ஒரு காலத்தில்; கடல் மார்க்கத்தின் கிழக்குக் கடல் மார்க்கத்தின் பலிபீடமாகவே அறியப்பட்டது. தற்காலத்தில் இக்கோபுரங்கள் இரண்டும் கிரேட் பாஸஸ் (புசநயவ டீயளளநள) என்றும் லிட்டில் பாஸஸ் (டுவைவடந டீயளளநள) என்றும் மிகவூம் பிரசித்தி பெற்றுள்ளது.

இலங்கை வரலாற்றின் மிகவூம் பழைமை வாய்ந்த இராச்சிமாகிய இராவணனின் லங்காபுரய இங்கு அமைந்திருந்ததாக சிலஆய்வாளர்கள் அனுமானிக்கின்றனர். இந்த இடத்தின் தகவல்கள் அடங்கிய வெளிப்பாடுகளைக் கொண்ட சில நூல்களும்இ ஆவணங்களும் இகட்டுரைகளும் உலகம் பூராகவூம் பிரசித்தி பெற்றள்ளதென இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடமொன்றினை இலங்கை பெற்றிருப்பதும் மற்றும் அது தென் கீழ்க் கரையில் வசிக்கும் மக்களுக்கும் பெருமைக்குரிய அம்சம் என்பதில் ஐயமில்லை.

இந்த இரட்டைக் கற்பாறைகள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிரிந்த பொத்தன கடற்கரைக்குச் சமாந்தரமான பல மைல்கள் நீளமாக கட ற்பரப்பில் பரந்துள்ளது. மகா ராவணா கோட்டை மற்றும் சிறு ராவணா கோட்டை அமைந்திருப்பது கிரிந்தையிலிருந்து 8.5 (கி.மீ. 15.5) கடல் மைல்கள் மற்றும் கடல் மைல்கள் 26 (47.5 கி.மீ;) தூரத்தில் கடலில் அமைந்துள்ளன.

இவைகரையிலிருந்து பரவிய மணற் கற்பாரைகளினால் உலவாகியிருப்பதோடு அதன் மேல் நீண்டகாலமாக சுண்ணாம்புக் கற்பாறைகள் நிறைந்ததன் காரணமாக பவளப் பாறையாகத் தோன்றியூள்ளதாக புவிச்சரிதவியலாளர்கள் கருதுகின்றனர;.

 

கறுப்பு கோட்டினால் சூழப்பட்ட வெள்ளை நிறமான சிறிய ராவணா கோட்டை கலங்கரை விளக்குஇ வெள்ளை நிறத்திற்கு ஒப்பீடாகவூள்ள மகா ராவணா கோட்டை கலங்கரை விளக்கை அறிந்து கொள்வதும் கடினமானதன்று.

 

மகா ராவணாஇ சிறிய ராவணா கலங்கரை விளக்குகள் சூழலிருந்து பெறப்படும் சவால்களை முறியடித்து மனிதர்களினால் வெற்றி கொண்டு இருபதாம் நூற்றாண்டில் கட்டியெழுப்பியதாகக்; கருதப்படுகின்றது.

 

உஸ்ஸன்கொட - ஹம்பாந்தோட்டை மாவட்டம்

தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கரையோரமாக அமைந்துள்ள இயற்கைச் சுற்றாடலுக்கிடையே அம்பலாந்தோட்டைப் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்திருக்கும் உஸ்ஸன்கொட பிரதேசம் விசேட இடத்தைப் பெறுகின்றது.

 

உஸ்ஸன்கொட பூமி உலர் வலயப் வனாந்தர இலட்சனத்தைக் கொண்டுள்ள மிகவூம் பிரம்மியமான நிலப் பிரதேசமாகும்.

 

இதன் வரலாறு இராம - இராவண அரசனின் இரசதானியம் இங்கு அமைக்கப்பட்டதாகவூம் இ இராவண மன்னனின் விமானமாகிய மைல் வாகனம் தரையிறக்கப்பட்ட இடமாகவூம் புராதன இதிகாசங்களில் இடம் பெறுகின்றது.

 

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக தரைப்பகுதியூம் இ கடல்வாழ் பல்வேறு இனங்களின் முக்கயத்துவமிக்க இடமாகவூம் உஸ்ஸன்கொட முக்கயத்துவம் பெற்ற ஸ்தானமாக விளங்குகின்றது.

 

மாத்தறை போதி

மாத்தறை நகர மத்தியில் உயன்வத்தை விளையாட்டரங்கின் முன்னால் அமைந்திருக்கும் புனித போதி தாவரவியலாராய்ச்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி அனுராதபுர ஜயசிரி மகா போதி எனப்படும் புனித வெள்ளரச மரத்தின் இனத்தைச் சேர்ந்தாகும். இப்போதி அமைந்திருக்கும் இடம் முற்காலத்தில் ஹத்போதி வத்த என அழைக்கப்பட்டதாக மாத்தறையின் வரலாற்றை புரட்டும் போது வெளியாகியூள்ளது.

பெரகும்பா சிரித்தில் உள்ள கவியில் குமாரதாஸ மன்னன் காலிதாஸ எனும் புலவனுக்காக தனது உயிரைத் துரந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தனது நண்பனுக்காக சிங்கள வீரனாகிய குமாரதாஸ மன்னன் எரியூம் விறகுக் கொட்டிலில் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவூம்இ அதனைக் கேள்வியூற்ற மன்னரின் தேவியாகிய அரசியூம் அதே விறகுக் கொட்டிலில் பாய்ந்து தனது உயிரையூம் மாய்த்துக் கொண்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டள்ளது. இந்நிகழ்வினை நினைவூ கூறும் வகையில் இந்த போதியூடன் மேலும் ஏழு போதி மரங்கள் நடப்பட்டதாக இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளன.

இவ்வாறு நீண்ட பலங்காலந்தொட்டே சிங்களஇ பௌத்த மக்களின் சமயஇ கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தப் புனித போதி திகழ்கின்றது.

வெவூறுகன்னல பன்ஸல

மாத்தறை மாவட்டத்தில் திக்குவல்லை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள போதி ரஜ மகா விகாரை தென் மாகாணத்தின் வரலாற்று வணக்கஸ்தளங்களில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூறு முழங்களைக் கொண்ட புத்தர் சிலை காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. இந்த விகாரையின் ஆரம்பம் 1895ம் ஆண்டென முன்பக்கக் கோபுரத்தில் பதியப்பட்டுள்ளது. இங்குள்ள புராதன விகாரைக்கும் தேவாலயத்துக்கும் கண்டி யூகத்தில் தோற்றப்பாடாகும் என வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன.

வரலாற்றின் உயர் பெறுமதி மிக்க மிகவூம் அரிதான சுவர்ச் சித்திரங்கள் பல இந்த விகாரையில் காணக் கிடக்கின்றது. இந்த விகாரை இல்லத்தின் மேற்பாகத்தில் பாரிய அதிசய மணிக்கூடு அமைந்துள்ளது. வெவூறுகன்னல வணக்கஸ்தளம் உலகப் பிரசித்தி பெறுவதற்கு இந்த மணிக்கூடும் முக்கிய காரணியாக விளங்குகின்றது.

தேசிய மற்றும் விதேசிய உள்நாட்டுப் பயணிகளிடையே மிகவூம் பிரசித்தி பெற்ற வரலாற்று விகாரை தென் மாகாணத்திற்கு பெரிதும் கௌரவம் வழங்கும் இடமாகக் கருதப்படுகின்றது.

மாத்தறை தங்கத்தீவூ

காண்போரின் மனதைக் கவரும் வண்ணம் பௌத்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்ததும் இந்த தங்கத் தீவூ மாத்தறை நகரில் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் கடலில் அமைந்துள்ளது.

பாரிய மரங்கள் நிறைந்த காடாக 2003ம் ஆண்டு வரை விளங்கிய பரலி தீவூ கடற் பாறைகளினால்சூழப்பட்டதனால் பாறைத்தீவூ என்ற பெயரில் வழங்கப்பட்டதென பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்ட கருத்தாகும்.

ஸ்ரீ ரோஹன மகா சங்கத்தின் வேண்டுகோளின் படி ரூபா 30 மில்லியனுக்கு அதிகமான செலவில் இவ்விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

2004 ம் ஆண்டு மாரச் மாதம் 30ந் திகதி திறக்கப்பட்டு சிரி ரோஹன மகா சங்க சபைக்கு இது வழங்கப்பட்டு பூஜிக்கபட்டது. முற்காலத்தில் பரைதீவூ எனவூம்இ 2004 ஆம் ஆண்டில் ஸ்ரீ ரோஹன உபோசதாகார மகா விகாரை எனவூம்இ வழங்கப்ட்ட இது 2004 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால்இ பூஜைப் பத்திரம் மூலம் பூஜை செய்யப்பட்டமையால் ஸ்ரீரோஹன உபோசதாகார ரஜமகா விகாரையாகியது.

மாத்தறை நகரின் பௌத்த மக்களின் முக்கியத்துவம் மிக்க வணக்கஸ்தளமாகிய இப்புனிதஸ்தளத்தில் புத்த மண்டபம்இ போதி மரக் கிளைகளுடன் இ விகாரைகள் பலவூம் காணக் கிடக்கின்றன.

கெட்டபர ரஜ மகா விகாரை மாத்தறை மாவட்டம்

மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல பிரதேச செயலாளர் பிரிவில் காலி தெனியாய பிரதான வீதியில் 45 47 மைல் கற்களுக்கிடையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற கெட்டபர மலை உச்சியில் இவ்விகாரை அமைந்துள்ளது. 30 அடிகளினாலான குகையினுள் பதினெட்டு முழங்கள் கொண்ட புத்தர் சிலையொன்று அமைந்திருப்பதுடன்இ இந்த விகாரையின் ஒரு பக்கத்தில் ரஜ்ஜூரு பண்டார மகா தேவாலயமும் மறு பக்கத்தில் விஷ்ணு கதிர்காமம் தேவாலயமும் அமைந்துள்ளது.

பௌத்தஇ அபௌத்தத அனைவரினதும் நீண்ட கால கௌரவத்துக்கும் இ பாத்திரமான இந்த விகாரை வலகம்பாகு அரசரினால் செய்விக்கப்பட்டதென வாய்மொழி மூல பாரம்பரியக் கருத்தாகும். பகைவர்களின் ஆக்கிரமிப்புக்கு முகங்கொடுத்த அரசன் அனுராதபுரத்திலிருந்து ஓடி வந்து றுஹூணையின் பல்வேறு இடங்களில் மறைந்திருந்து படை திரட்டியதாகவூம்இ இக்காலகட்டத்தில் கெட்டபர ரஜமகா விகாரை அமைந்துள்ள இடத்தில் வசித்ததாகவூம்இ குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக செடி கொடிகள் படர்ந்துஇ காடாகக் காணப்பட்ட இவ்வணக்கஸ்தளம் கி.பி. 1834 ம் ஆண்டில் வேட்டையாடச் சென்ற கிராமவாசிகள் குழுவினரால் கண்டு பிடிக்கப்பட்டதாகவூம் இபின்னர் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் அங்கவாசம் ஒன்றமைத்து வீரசிங்க சுமங்கல மகா தேரர் அங்கு தரிக்கப்பட்டதாகவூம் கூறப்படுகின்றது.

மாத்தறை நட்சத்திரக் கோட்டை

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் போது நிர்மானிக்கப்பட்ட நட்சத்திரக் கோட்டை என தற்காலத்தில் வழங்கப்படும் இது ஆரம்ப காலத்தில் சுநனழரவந  ஏயநெஉம என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஓல்லாந்தரின் கட்டிட நிர்மானக் கலையின் திறமைஇ கோட்டைகள் அமைப்பதில் காட்டிய விசேட திறமை மற்றும் திட்டமிட்ட செயற்பாடுகள் நட்சத்திரக் கோட்டை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஓல்லாந்தரினால் நிர்மானிக்கப்பட்ட மாத்தறைக் கோட்டை வெளியால் தற்பாதுகாத்துக் கொள்ளும் சாமர்த்தியமாக இந்த நட்சத்திரக் கோட்டை நிர்மானிக்கபட்டுள்ளது. இந்த நட்சத்திர உருவைக் கொண்டிருப்பதில் இப்பெயர் வழக்கில் வந்துள்ளது.

1876ல் பிரித்தானியரின் ஆக்கிரமிப்புடன் இந்த நட்டசத்திரக் கோட்டையின் அதிகாரமும் அவர்கள் வசமாகியது. பிரித்தானிய யூகத்தில் இக்கோட்டை அவர்களின் சிவில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. 1974ம் ஆண்டு இது தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பின்னர் இது ஆரம்ப கட்டிடக் கலைகளுக்குச் சமமாக பேணிப் பாதுகாக்கப்பட்டது.

மாத்தறை நகரின் உல்லாசப் பயணிகளைக் கவரும் விசேட இடமாக இது இன்று மாறியூள்ளது. காலனித்துவக் காலத்தின் அடையாளச் சின்னமாக நட்சத்திரக் கோட்டையைக் கருத முடியூம்.

சீனிகம தேவாலயம்:- காலி மாவட்டம்

தென் மேல் கரையோரத்தில் கொழும்பு மாத்தறை பிரதான வீதியில் (ஹிக்கடுவ நகருக்கு அண்மையில்) கடலில் சிறு தீவொன்றில் சீனிகம தேவாலயம் அமைந்துள்ளது.

இத்தேவாலயம் தெலொல் கடவூளின் வணக்கஸ்தளமாக இலங்கையர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தெலொல் கடவூள் தேசிய ரீதியல் மக்களிடையேகௌரவத்துக்குப் பாத்திரமான கடவூளாகும். இக்கடவூளுக்கு இந்திரஜால வல்லமை இருப்பதாக மக்களிடையே நம்பிக்கை நிலவூகின்றது. இந்த தெலொல் கடவூளின் மற்றொரு பூஜஸ்தானம் (தேவாலயம்)மாக கடற்கரையோரமாக அமைந்துள்ள இந்த ஸ்தானம் முக்கியம் பெறுகின்றது.

நேர்ச்சைகள் மற்றும் ப+ஜைகளுக்காக மக்கள் இந்த தேவாலயத்திற்கு வருகை தருகின்றனர். தெவொல் கடவளுக்காக வருடாந்தம் எஸெல காலத்தினுள் ப+ஜைவழிபாட்டு உட்சவங்களுக்கான நிகழ்வூகள் இவ்விடத்தில் நடாத்தப்படும். அவ்வாறே தமக்குஏதாவது அசம்பாவிதங்கள் அல்லது விபத்துக்கள் ஏற்படின்இ கடவூளிடம் முறையிடுவதும்இதேவாலயத்திலுள்ள விசேட கல்லில் மிளகாய் அரைத்துமுறையிடுகையில் நன்மை அளிக்கும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.

பொம்மலாட்ட நாடகக் கலை

இலங்கையின் பொம்மலாட்ட நாடகக் கலைக்கு நீண்ட வரலாற்றொன்று உண்டு. இலங்கைக்கு பொம்மலாட்ட நாடகக் கலை இந்தியாவிலிருந்து கிடைக்கப் பெற்ற ஒரு பொக்கிஷமென பொம்மலாட்டக் கலைஞர்களின் கருத்தாகும்.

இலங்கைக்கும் இந்நதியாவூக்கும் இடையில் நிலவூம் நீண்ட கால தொடர்பின் காரணத்தினால் பொம்மலாட்ட நாடகக் கலை இந்தியாவிலிருந்து எமது நாட்டுக்குக் கிடைத்த வெகுமதி என்ற கருத்தை மறுக்க முடியாது.சிங்கள அகராதியில் பொம்மைகள் எனக் குறிப்பிடப்படுவது மரத்தினால் செய்யப்பட்ட பொம்மலாட்டக்காரர்மனித உருவத்திற்காகும். பொம்மை உயிரற்ற பொருளாகையால் அதனை இயங்க வைப்பதற்குவேறொருவரின் உதவி அவசியமாகும்.

இலங்கையில் பொம்மைகள் செய்வதற்குப் பெரும்பாலும் கதுரு எனப்படும் பலகையே பயன்படுத்தப்படுகின்றது. பல்வேறு கதாபாத்திரங்களை உருவகப்படுத்தத் தேவையான பொம்மைகள் உருவாக்கப்படும் போது தலைஇ உடல்இ கைகள்இ மணிக்கட்டுஇ கால்களின் முழங்கால்களை வெவ்வெறாக வெட்டி கம்பிக் கொழுக்கைகளினால் மூடி ஒன்றாக இணைக்கப்படுகின்றது. அவ்வாறு செய்யப்படுவது கதாபாத்திரங்கள் காட்சிப்படுத்தும் போது அவை அசைவதற்கு இலகுவாக இருப்பதற்கேயாகும். ஓவ்வொரு பாகத்திற்கும் வெவ்வேறாக நூலினால் இணைத்து அந்நூலின் கைப்பாகத்தை 1 ½ அடி நீளமான தடியொன்றில் இணைத்துக் கட்டப்படும். பொம்மையை இயக்கும் கொட்டிலின் மேலேறி பொம்மலாட்டக் கலைஞர் பொம்மையோடு இணைத்துள்ள நூலை அங்குமிங்குமாக அசைத்துக் கதாபாத்திரத்திற்குஏற்ற வகையில் பொம்மையை இயக்க வைப்பார். அக்கலைஞரினால் அதற்குரிய வசனத்தை  ரசிகர்கள் செவியூறும் வண்ணம் கூறுவார்.

தென் மாகாணத்தில் அம்பலாங்கொடைப் பிரதேசம் பொம்மலாட்டக் கலைக்கு பிரசித்தி பெற்று விளங்குகின்றது.

றூமஸ்ஸல மலை காலி மாவட்டம்

காலித் துறைமுகத்திற்கு தென் புறமாக ஹபராதுவ பிரதேச செயலாளர் பிரிவூக்கு வடக்குக் கோடியினுள் றூமஸ்ஸல மலை அமைந்துள்ளது. ஏறுகு;குறைய 400 ஹெக்டர் நிலப்பரப்பை இது கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 40 மீட்டர் அளவூ உயரத்தைக் கொண்டது. மிகவூம் இருண்ட கிரனைட் பாறைகளினால் மற்றும் தடித்த மணித்தட்டினால் இம்மலை உருவாகியூள்ளது. இம்மலையின் ஒரு முனை காலித் துறைமுகத்தின் இயற்கை அமைப்புக்கு பேருதவியாக விளங்ககின்றது. மற்றைய முனையில் பிரசித்தி பெற்ற வெல்ல தேவால (கடற்கரை தேவாயலம்) அமைந்துள்ளது.

இராம - இராவண யூத்தத்தின் போது நோயூற்ற லக்ஷ்மனன் குணப்படுத்தவதற்கு தேவையான மருந்துச் செடியொன்றை அனுமான் இந்தியாவின் இமாலய வனத்திலிருந்து கொண்டு வந்ததாகவூம்இ அவ்வாறு கொண்டுவரும் போத இமாலயக் காட்டின் ஒர் பகுதி கழன்று விழுந்தாகவூம் ஜனப்பிரவாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கழன்று விழுந்த இடம் உனவட்டுனஎன வழங்கப்படுகின்றது. இன்று கூட இம்மலையில் அரிதான மருத்துவ மூலிகைச் செடிகள் ஏராளமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆயூர்வேதத்தில் குறிப்பிடப்படும் கொபலுகுளிய எனப்படும் மருந்து வகையைச் செய்வதற்கு தேவைப்படும் கொளஸ்கெலன் எனும் மிகவூம் அரிதான செடியூம் உனவட்டுன வெல்லதேவாலயத்திற்கு அண்மித்துக் காணப்படுகின்றது.

றூமஸ்ஸல மலையடிவாரத்தின் கடற்கரை மிகவூம் ரம்மியமான (கொரல்) பளிங்குக் கற்பாறையினால் சூழப்பட்டுள்ளது. உலகின் மிகவூம் அரிதான உயிர்ப்பாறைகள் பல இக்கடற்கரையில் அமைந்தள்ளது. இந்த பளிங்குப் பாறையில் அலங்கார மீன் இனங்களும் நீர் வாழ் உயிரினங்களும் பெருந்தொகையாக நடமாடுகின்றன. பசுமை நிறங் கொண்ட றூமஸ்ஸல மலைக்குன்றுறுஹூணையின் மற்றும் மானிட இனத்துக்காக இயற்கையினால் வழங்கப்பட்ட அப+ர்வ நிர்மானமாகும்.

சிங்கராஜ வனம்:- இலங்கையில் தற்போது எஞ்சியிருக்கும் மிகப் பழைமையான வனாந்தரமாகிய சிங்கராஜ வனாந்தரம் இத்தீவின் தென் மேற்குத் திசையில் காலிஇ மாத்தறைஇ இரத்தினபுரி மாவட்டங்கள் மூன்றுக்குமுரிய ஈரவலயத்தில் அமைந்திருக்கின்றது.

22000 ஏக்கர் வரையான சிங்கராஜ வனப் பிரதேசத்தின் இயற்கை எல்லையாக வடக்கே நாப்பனெவ அருவி மற்றும் குக்குலு நதியூம்இ தெற்கு மற்றும் தென் கிழக்காக மஹதொல மற்றும் ஜின் கங்கையூம் மேற்காக களுகந்தாவ மற்றும் குடாவ நதியூம் கிழக்காக பெவர்லி பெருந்தோட்டமும் கருதப்படுகின்றது.

இந்த வனாந்தரத்திற்கு வருடாந்தம் விழும் மழைவீழ்ச்சி 80-160 அங்குலமாக இருப்பதோடு வருடாந்த வெப்பநிலை 74.6 பரனைட்; பாகையாகக்கருதப்படுகின்றது. காட்டின்மத்தியில் உயர்ந்த ஒரு கற்குன்டொன்று காணப்படுகின்றது. இது சிங்ககல கன்த  (சிங்கக் கல் மலை) என அழைக்கப்படுகின்றது. இங்கு அமைந்திருக்கும் பாரிய குகையினுள் சிங்கங்கள்; வசித்தாகவூம்இ அதன்படி இல்லனம் சிங்கராஜ என நாமம் சூழப்பட்டதாகவூம்ஜனப்பிரவாதத்தில் கூறப்படுகின்றது.

1978 ஆம் ஆண்டில்  சிங்கராஜ வனம்  சர்வதேச  மனித ஜீவ  வலயம் என பெயரிடப்பட்டதோடு1980 ம் ஆண்டில் சிங்கராஜ வனம் தேசிய வனமாகப் பெயரிடப்பட்டது. 1989 ம் ஆண்டில் யூனெஸ்கோ நிறுவனத்தினால் உலக உரிமைப் பூமியாக பிரகடனங் செய்யப்பட்டு சர்வதேச பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இதுவரை செய்யப்பட்ட பரிசோதனை ஆய்வூகளின் படிஇ இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ள பெறுமதி வாய்ந்த சொத்தாக சிங்கராஜா வனம் கருதப்படுகின்றது.

தூண்டில் மீன்பிடிக் கைத்தொழில்

சம்பிரதாய மீன்பிடிக் கைத்தொழிலில் மீன்பிடி முறைகள் காணப்படுவதுடன்இ தோணிகள் மூலம் மீன்பிடித்தல்இ வலைவீசி மீன்பிடித்தல்இதூண்டில் மூலம் மீன் பிடித்தல் என்பனவே அவையாகும். இச்சம்பிரதாய முறைகளில் தென் மாகாணத்தில் காலிஇ மாத்தறைஇமாவட்டங்களுக்கு உரித்தான மீன்பிடி முறையாக தூண்டில் மூலம் மீன்பிடி முறையைக் குறிப்பிடலாம்.

விசேடமாக பருவகாலத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்வதுகடினமாகையால் கரையோரக் கடலில் அமைக்கப்பட்ட கோல்களில் ஏறி தூண்டிலைப் பயன்படுத்தி சிறிய மீன் இனங்களைப் பிடிப்பது தூண்டில் முறை எனப்படும்.

இம்முறைகள் விசேடமாக கொக்கல இ அஹங்கமஇ வெலிகமஇ பொல்ஹேன பிரதேசங்களில் அதிகமாகக் காணப்படும்.

விசேடமாக இப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்யூம் உல்லாசப் பிரயாணிகளுக்கு இது ஒரு புது அனுபவமாக இருப்பதால் இதனைக் கண்டுகளிக்க விரும்புவதைக் காண முடிகிறது. இதனைப் புகைப் பிடிப்பதும்இ வீடியோ படமெடுப்பதும் உல்லாசப் பிரயாணிகளின் பொழுது போக்காக விளங்குகின்றது.

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2016 11:22 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  

அரசாங்க தகவல் நிலையம்